ஆகாஷ் ஏவுகணை
தரையிலிருந்து வான் ஏவுகணைகள் · Akash
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Bharat Dynamics Limited, Bharat Electronics
ஆகாஷ் ஏவுகணை (Akash) தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை ஆகும்.இந்தியாவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, படைக்கருவி தொழிற்சாலைகள் வாரியம் மற்றும் பாரத் மின்நிறுவனம் ஆகியன இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கின. எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. இதன் சிறப்பென்ன வென்றால், இது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய (2.5 Mach Number) வேகத்தில் போகக்கூடியது. நீட்சித் தூரம் 25 கி.மீ. (15 மைல்) கொண்ட இந்த தாக்குகணை எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.







