பிரமோஸ்
க்ரூஸ் ஏவுகணைகள் · BrahMos
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்BrahMos Aerospace Private Limited
பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.
இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.