எம். எச்-6 லிட்டில் பேர்டு
தாக்குதல் ஹெலிகாப்டர்கள் · MH-6 Little Bird
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்MD Helicopters
எம். எச்-6 லிட்டில் பேர்டு (MD Helicopters MH-6 Little Bird) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தால் பயன்படுத்தப்படும், எடைக்குறைவான திறன்மிகு கண்காணிப்பு, தாக்குதல் உலங்கு வானூர்தி (Helicopter) ஆகும். இது "கொலையாளி முட்டை" (Killer Egg) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது முதன்மையாகப் போர்க்களத்தில் சிறப்புப் படைப் பிரிவினரை ஏற்றிச் செல்லவும், வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் வடிவமைக்கப்பட்டது.எம்.எச்-6 உலங்கு வானூர்திகள் அவற்றின் சிறிய அளவிற்கும், மிக நெருக்கமான இடங்களிலும் தரையிறங்கும் திறனுக்கும் பெயர் பெற்றவை ஆகும்.






