சு-27
போர் விமானங்கள் · Sukhoi Su-27
தோற்ற நாடு
Soviet Union
உற்பத்தியாளர்Sukhoi, Komsomolsk-on-Amur Aircraft Production Association
சுகோய் எஸ்யு-27 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும். பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் ஆளுமை, இடைமறிப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
1985 இல் சோவியத் வான்படையில் இந்த வானூர்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க குண்டுவீசும் வானூர்திகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கவும், சோவியத் கடற்கரை பகுதிகளை எதிரி நாடு வானூர்தி தாங்கிக் கப்பல்களிடமிருந்து பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. மேலும் சோவியத் வான்படையின் கனரக படைத்துறை வானூர்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இவை செயல்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இந்த வானூர்தியை மையமாக கொண்டு சுகோய் எஸ்யு-30 மற்றும் சுகோய் எஸ்யு-35 போன்ற பல வானூர்திகள் உருவாக்கப்பட்டன.